மோடிக்கு எதிராக போஸ்டர். 3 வங்கதேச மாணவர்கள் கைது

மோடிக்கு எதிராக போஸ்டர். 3 வங்கதேச மாணவர்கள் கைது
modi

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசுமுறை சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றார். அவருடன் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியும் சென்றுள்ளார். இருவருக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பின்னர் மோடியுடன் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டிய வங்கதேச மாணவர்கள் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வங்க தேசத்திலுள்ள சிட்டகாங் விலங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில், இன்ஜினியரிங் மாணவர் இஷ்தியாக் ஹுசைன் (25), வத்தகப் பட்டப்படிப்பு மாணவர் ஆசன் அலி மியா (24) மற்றும் அப்துல் ஸவாத் (22) ஆகிய மாணவர்கள், மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்.

இதைப் பார்த்த சக மாணவர்கள், மூன்று பேரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இதையடுத்து, 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களிடம் இருந்து வங்கதேச அரசுக்கும், மோடிக்கும் எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில்  இந்திய-வங்கதேச நாடுகளுக்கு இடையேயான பேருந்து இயக்கத்தை மோடியும், வங்கதேச பிரதமரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Leave a Reply