தென்கொரிய அதிபர் பதவியிழப்பு எதிரொலி. தலைநகரில் பயங்கர வன்முறை
தென்கொரியா நாட்டின் பெண் அதிபர் பார்க் ஜியன்ஹை என்பவர் நேற்று அந்நாட்டு நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதிபரின் பதவியேற்பு உத்தரவால் அதிர்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களும் தலைநகர் சியோலில் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர்
தென்கொரிய அதிபர் பார்க் ஜியன் ஹை மற்றும் அவரது தோழி ஆகியோர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, பல மோசடிகள், ஊழல்களை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. குறிப்பாக சாம்சங் நிறுவனத் தலைவருடன் இணைந்து, சீனாவுக்குப் உதவும் வகையில் பல உளவுப் பணிகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிபர் பார்க் ஜியன் ஹை பதவிநீக்கம் செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அடுத்த 60 60 நாட்களில், அதிபர் பதவிக்கான தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
பதவி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் சியோல் உள்பட பல இடங்களில் வெடித்த வன்முறையில் 2 பேர் பலியாகியுள்ளனர் பலர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன