அமெரிக்காவில் சாதனை படைத்த இரண்டு பெண் தொழிலதிபர்கள்

அமெரிக்காவில் சாதனை படைத்த இரண்டு பெண் தொழிலதிபர்கள்

jayshree ullal neerja sethi chennai today newsஇந்திய பெண்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சென்று பல்வேறு சாதனை செய்வதை அவ்வப்போது வரும் செய்திகளின் மூலம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் அமெரிக்காவின் தொழில்துறையில் வெற்றிகரமாக செயல்படும் பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் ஃபோர்ஸ் பத்திரிகை தொழில் துறையில் வெற்றி பெற்ற 60 பெண்கள் பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய 61வயது நீரஜா சேத்தி மற்றும் 55 வயது ஜெயஸ்ரீ உல்லால் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

தொழில்துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு அதிக வருமானம் பெற்ற அமெரிக்கப் பெண்கள் பட்டியிலில் 16-ஆவது இடத்தை நீரஜா சேத்தி பெற்றுள்ளார். இவர் தனது கணவர் பரத் தேசாயுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தையும், அயல்பணி ஒப்பந்தச் சேவை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நீரஜா சேத்தியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.7,400 கோடியாகும்.

இதேபோல் மற்றொரு இந்திய வம்சாவளி பெண்மணியான ஜெயஸ்ரீ உல்லால், அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையில் ஜெயஸ்ரீ உல்லாலின் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. மிகக்குறைந்த வருமானத்துடன், 50-க்கும் குறைவான பணியாளர்களுடன் இயங்கி வந்த அரிஸ்டா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஜெயஸ்ரீ உல்லால் 2008-ஆம் ஆண்டில் ஏற்றார். அதன்பிறகு 5 ஆண்டுகளில் அந்த நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது. லண்டனில் பிறந்த ஜெயஸ்ரீ உல்லால், புதுடெல்லியில் கல்வி பயின்றவர். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.3,200 கோடியாகும்.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் டயான் ஹென்ட்ரிக்ஸ் என்பவர் ரூ.33 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உல்ளார். அவர் ஏபிசி சப்ளைஸ் என்ற பெயரில் மிகப்பெரிய மொத்த விற்பனை மற்றும் பொருள்கள் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Chennai Today News: 2 Indian-Origin Women In Forbes’ Self-Made American Women List

Leave a Reply