பத்திரிக்கையாளர்கள் சுட்டுக்கொலை:பீகார், ஜார்கண்ட் டில் அட்டூழியம்

பத்திரிக்கையாளர்கள் சுட்டுக்கொலை:பீகார், ஜார்க்கன்ட்டில் அட்டூழியம்
biharjournalist
பீகார், ஜார்க்கன்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இருமாநில அரசுகளை மட்டுமின்றி பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் செய்தியாளராகப் பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன் ரயில் நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் கழுத்து மற்றும் தலையில் குண்டு பாய்ந்து ராஜீவ் ரஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் ராஜீவ் ரஞ்சன் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்திலும் பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கன்ட் மாநிலத்தில், உள்ளூர் பத்திரிக்கையாளராக இருந்தவர் அகிலேஷ் பிரதாப் சிங். இவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க மாநில முதல்வர் ரகுபார் தாஸ் ஜார்க்கன்ட் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply