ரூ.400 கோடியாக மாறிய ‘2.0’ படத்தின் பட்ஜெட்
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘2.0’ படம் லைகா நிறுவனத்தால் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் தற்போது ரூ.400 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் நிலையில் தற்போது இந்த படம் ஆங்கிலம், ஜப்பானீஸ், மாண்டரின் ஆகிய மொழிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலும் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
மேலும் இந்த படத்தின் பெரும்பகுதி பட்ஜெட் கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவே செலவு செய்யப்படவுள்ளது. வரும் ஜனவரியில் தொடங்கும் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி சுமார் ஒரு வருடம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷூ பாண்டே, அதுல் ஹுசைல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்