20 தொகுதிகள் அதிகம் பெற்றுள்ளோம்: எச்.ராஜா

20 தொகுதிகள் அதிகம் பெற்றுள்ளோம்: எச்.ராஜா

இந்திய அளவில் பாஜக பெற்ற மகத்தான வெற்றி குறித்து பாஜக தேசிய செயலாலர் எச்.ராஜா தனது முகநூலில் கூறியதாவது:

கொண்டாட்டத்திற்கான நேரமிது. பாஜக சென்ற முறையைவிட 20 இடங்கள் அதிகம் பெற்று 302 தொகுதிகளுடன் நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம். பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னை பொறுத்தவரை அரசியல் அதிகாரமும் மக்களுக்கு சேவையாற்றும் ஒரு கருவியே. எனவே நமது அடிப்படை சித்தாந்தம் மற்றும் இயக்கப்பணி மீண்டும் இன்றே துவங்கும்.

https://www.facebook.com/HRajaBJP/posts/2138222609628411?__xts__[0]=68.ARBdhDRr25QUdvhpeCYZl9p4lv3QylnON6v3-7kvQhz90uTN2CnUBIYscthdQ7kOwCIp40EjO-S-5wVg9OHrL-qOaCxceILYLtps_4bFJ34n2cmzI7BAvO_PiUUb_4Dv8zL2F379Mu4sPz3YXRVLelehuJCymMLGfMM-kv8gluVobVkmENzHby8oAvwFItVrjjthbWs0mAZ8qz49oa17_FyURo5WdPALhvQseIdgBgX8JtMgWb0MJjV2UPuL9_SXUUWnjSEWaEetKYsCkYM1Pmvsv7E30w0PW1pOxdtVr_yXKCcHLPVGEHsKLv7eXnIE1zkspsMH1YMc9ul293Zpyw&__tn__=-R

Leave a Reply