20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானதை அடுத்து தற்போது தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த 20 தொகுதிகளில் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க அதிமுக, திமுக, தினகரன் மற்றும் ஒருசில கட்சிகள் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த்ட 20 தொகுதிகளில் ரஜினி கட்சியும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த 20 தொகுதிகளிலும் போட்டியிட்டு தங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றதா? என்பதை வெள்ளோட்டாம் பார்க்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும், இந்த முடிவை பொருத்தே கட்சி ஆரம்பிப்பது குறித்து ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கமல்ஹாசன் கட்சி இந்த 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று கருதப்படுகிறது. மேலும் ஒருவேளை ரஜினி, கமல் இரண்டு கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் விஜய் அதிரடியாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.