20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: டெல்லியில் திருப்பம் ஏற்படுமா?

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: டெல்லியில் திருப்பம் ஏற்படுமா?

சமீபத்தில் தமிழகத்தில் 18எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் நேற்று டெல்லி சட்டசபையின் 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிஅலியில் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி பா.ஜ.க. தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா பதிவுசெய்துள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது, “20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்த ஜனாதிபதியின் உத்தரவு இயற்கையான நீதிக்கு எதிரானது. உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கவில்லை. இது மோசமான உத்தரவாகும்”, என கூறியுள்ளார்.

சத்ருகன் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டில், “வெண்டாட்டத்தின் அரசியல் அல்லது சொந்த நலன்களின் அரசியல்கள் நீண்ட காலம் நீடிக்காது. கவலைப்பட வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்!. உங்களுக்கு விரைவில் நீதி கிடைக்குமென்று நான் நம்புகிறேன், அதுவே எனது ஆசை. அதற்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். ‘ஆம் ஆத்மி’ கட்சியினர் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்துக்கள். செல்லும் வழி கடினமாகும் போது, அது தானாக சரியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சத்யமேவ ஜெயதே! ஜெய் ஹிந்த்!”, என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply