த்ரிஷாவின் 20 வயது புதிய காதலர். அனுஷ்காஅதிர்ச்சி

trishaஅஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் படத்தின் புதிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் த்ரிஷாவின் காதலராக வரும் அஜீத், 20 வயது வாலிபன் கேரக்டரில் நடிக்க இருக்கின்றார்.

வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் கேரக்டரிலும் நடிக்க இருக்கும் அஜீத், இன்னொரு வேடமான 20 வயது வாலிபர் வேடத்திலும் நடிக்க இருக்கின்றார். அந்த 20 வயது வாலிபர் கேரக்டருக்கு ஜோடியாகத்தான் த்ரிஷா நடிக்கவிருக்கின்றார். படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கும் அஜீத்தின் கேரக்டருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் அனுஷ்கா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த 20வயது கேரக்டருக்காக அஜீத், மிகவும் சிரமப்பட்டு ஜிம் சென்று தனது உடல் எடையை குறைக்கும் தீவிர முயற்சியில் இருக்கின்றார். கவுதம் மேனனும் இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது. வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Leave a Reply