டெல்லி: 20 வயது இளைஞன் அடித்து கொலை: சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

டெல்லி: 20 வயது இளைஞன் அடித்து கொலை: சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

பணம் திருடியதாக சந்தேகத்தின் பேரில் டெல்லி, ஆதர்ஷ் நகர் ரயில் நிலையத்தில் 20 வயது தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வியாழனன்று நடந்த இந்தக் கொடூரக் கொலையில் குற்றச்சாட்டு ஒன்றுமில்லாமல் போனது, அவரிடம் இவர்கள் சந்தேகித்த வகையில் பணம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

கொலையுண்ட நபரின் பெயர் ராகுல், அவரிடம் எந்தப் பணமும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

20 வயதான ராகுல் சுமைதூக்கியாக மண்டியில் கூலி வேலை செய்து வந்தார். ஜஹாங்கிர்புரி குடிசைப்பகுதியில் வசித்து வந்தார். இவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார் கூறியதாவது:

கொலை வழக்குப் பதிவு செய்துள்ளோம். 3 பேரும் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி பதிவுகளும் கிடைத்துள்ளது. காரணம் என்னவென்பதைக் கண்டுபிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பண விவகாரம் என்று இப்போதைக்குத் தெரிகிறது, என்று காவல்துரை உதவி ஆணையர் (ரயில்வே) பர்வேஸ் அகமது தெரிவித்தார்.

சம்பவதினத்தன்று ராகுல் தங்களில் ஒருவரிடமிருந்து ரூ.20,000த்தை திருடிச் சென்றதாகவும் அவரிடமிருந்து பணத்தை மீண்டும் எடுக்க முயற்சி செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் அடித்து உதைக்கத் தொடங்கியவுடன் தப்பி ஓடிய ராகுல் மண்டிக்கு அடுத்ததாக உள்ள சுவரை ஏறிக்கடக்க முயற்சி செய்துள்ளார். 3 பேரும் இவரை ஒன்றாம் நடைமேடை முடிவு வரை ராகுலைத் துரத்தியுள்ளனர்.

“ராகுல் முகம், மார்பு என்று இவர்கள் தாறுமாறாக அடித்துள்ளனர். அவரைக் கீழே தள்ளி அந்தரங்க உறுப்பு மீதும் தாக்கியுள்ளனர்” என்றார் போலீஸ் அதிகாரி.

இத்தனை ரகளை நடந்தும் ஒருவர் கண் முன்னால் கொலை செய்யப்பட்ட போதும் ரயில் நிலையத்தில் மற்றவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நடைமேடையில் பணியில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள், மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் ராகுல் உதவிக்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் வருவதற்குள்ளேயே ராகுல் எழுந்திருக்க முடியாத அளவுக்குத் தாக்கப்பட்டிருந்தார். ஹெட் கான்ஸ்டபிள் மூவரையும் விரட்டிப் பிடித்துள்ளார்.

ஆனால் முதலில் தரையில் மயக்கமாகி கிடந்த ராகுலைக் காப்பாற்றியிருக்க வேண்டும் ஆனால் அது செய்யப்படவில்லை, சம்பவம் நடந்து ஒருமணி நேரம் வரை ராகுலின் உடல் பிளாட்பாரத்திலேயே கடந்துள்ளது.

ஆம்புலன்ஸ் உரிய நேரத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. உள்காயத்தினால் இருதயம் செயலிழந்து விட்டது என்று முதற்கட்ட மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

Leave a Reply