தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மா உணவகம்’ பொதுமக்களின் பெரும் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றன. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை குறைந்த விலையில் நிறைவான உணவு வகைகளை பெற்று சாப்பிட்டு வருகின்றனர். சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெகுசிறப்பாக அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன
தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும், வார்டுக்கு ஒன்று என்ற கணக்கில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு வார்டிலும் கூடுதலாக ஒரு அம்மா உணவகம் திறக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மேலும் 200 புதிய அம்மா உணவகங்கள் வெகுவிரைவில் திறக்கப்படவுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் 200 கூடுதல் உணவகங்கள் திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகம் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.