சென்னையில் 200 மாநகர பேருந்துகள் திடீர் நிறுத்தமா? பயணிகள் அதிர்ச்சி

சென்னையில் 200 மாநகர பேருந்துகள் திடீர் நிறுத்தமா? பயணிகள் அதிர்ச்சி

சென்னையில் 200 மாநகர பேருந்துகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து கழகம் நிறுத்திவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி சென்னைவாழ் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதன் காரணமாக இரவு 9 மணிக்கு மேல் சென்னையில் 10% பேருந்துகளே ஓடுவதாகவும், இதனால் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து சிஐடியு மாநகர தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், சாதாரண பேருந்துகள் விரைவு பேருந்துகளாகவும், டீலக்ஸ் பேருந்துகளாகவும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது டெப்போக்களுக்கு 5 முதல் 8 பேருந்துகள் வீதம் 200க்கும் அதிகமான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. புதிய பேருந்துகள் வந்தும் மாதக்கணக்கில் ஆகிவிட்டது. இந்நிலையில், பழைய பேருந்துகளை சரிசெய்வதும், பராமரிப்பதும் கிடையாது. இதன் காரணமாக 200 பேருந்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் பழைய பேருந்துகளை உடனடியாக பழுத நீக்கம் செய்து, புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வடபழனி, மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், கே.கே.நகர் என்று கிட்டத்தட்ட 32 இடங்களில் பேருந்து பணிமனைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் டெப்போக்களுக்கு 5 முதல் 8 பேருந்துகள் வீதம் 200 பேருந்துகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்று ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Leave a Reply