இன்று முதல் ரூ.200 நோட்டு: அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்

இன்று முதல் ரூ.200 நோட்டு: அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரூ.2000 நோட்டால் சில்லரை தட்டுப்பாடு அதிகமானதால் சில்லரை தட்டுப்பாட்டை போக்க இன்று முதல் ரூ.200 கரன்ஸி அறிமுகம் செய்யப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.

முதன் முறையாக வெளியிடப்பட உள்ள 200 ரூபாய் நோட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கையெழுத்துடன் வெளியாக இருக்கும் இந்த நோட்டின் முன்பக்கத்தில் நடுவே மகாத்மா காந்தி படம் இடம் பெற்று உள்ளது. இடது புறத்தில் 200 என்ற எண் தேவநாகரி எழுத்தில் இருக்கிறது.

வலது புறத்தில் அசோக சின்னமும், ‘எச்’ என்ற எழுத்தும், 200 என்ற எண் பச்சை மற்றும் நீல நிறத்தில் மாறும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. நோட்டின் வலது மற்றும் இடது புறத்தில் 4 கோடுகளும் அதன் நடுவில் 2 சிறிய வட்டங்களும் உள்ளன. பார்வை குறைபாடு உள்ளவர்களும் எளிதாக இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் மகாத்மா காந்தி படம், ‘எச்’ எழுத்து, அசோக சின்னம் ஆகியவை சற்று மேல் எழும்பியவாறு இடம் பெற்று இருக்கின்றன.

Leave a Reply