வெள்ளத்தில் சிக்கியது சென்னை மட்டுமல்ல.. வடமேற்கு இங்கிலாந்து, நார்வே நாடுகளில் பெருவெள்ளம்
[carousel ids=”77847,77848,77849,77850″]
கனமழை, மற்றும் பெருவெள்ளம் இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையை மட்டும் தாக்கவில்லை, வடமேற்கு இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளையும் பெருமளவு பாதித்துள்ளது. நார்வே நாட்டை வெள்ளத்தால் வீடுகள் அடித்து கொண்டு போகும் வீடியோ காட்சிகள் இணையத்தில் உலா வருகின்றது.
வடமேற்கு இங்கிலாந்தில் நாட்டில் பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின. தண்ணீரில் தத்தளித்த பொதுமக்களைக் காக்கும் வகையில் அந்நாட்டு ராணுவமும், மீட்புப் படையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அடுக்குமாடிக் கட்டடங்களின் முதல் தளம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. ஒரே நாளில் பெய்த 34 சென்டி மீட்டர் மழையே இதுபோன்ற வெள்ளத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதேபோல் நார்வே நாட்டில் கடந்த 150 ஆண்டுகளுக்கு பின்னர் கனமழை பெய்ததாகவும், இந்த வெள்ளத்தின் காரணமாக வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்று கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.