ரூ.1,227 கோடிக்கு தனிநபர் இன்சூரன்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை.

11அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஒருவர் ரூ.1227 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

ரூ.1,227 கோடிக்கு தனி நபர் ஆயுள் காப்பீடு செய்துள்ள அந்த நபர், கலிஃபோர்னியா மாகாணத்தில் சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியை சேர்ந்தவர். அவர் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்த கின்னஸ் அமைப்பு அவருடைய பெயரை வெளியிட மறுத்துவிட்டது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பராவைச் சேர்ந்த SG, LLC, என்ற நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான டோவி பிரான்ஸஸ் என்பவரால் இந்த இன்சூரன்ஸ் விற்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக Peter Rosengard என்பவர் $100 மில்லியன் டாலருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததே கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த புதிய நபர் $201மில்லியன் இன்சூரன்ஸ் செய்து சாதனை படைத்துள்ளார். அதாவது முந்தைய கின்னஸ் சாதனை தொகையைவிட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply