2017ஆம் ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற இந்திய மாணவி

2017ஆம் ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற இந்திய மாணவி

2017ஆம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனிஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

2017ஆம் ஆண்டின் உலக அழகி இறுதி சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் இந்தியாவை சேர்ந்த மனிஷி சில்லார் பட்டம் வென்றார்.

உலக அழகியை பட்டம் வென்ற ஆறாவது இந்திய அழகி மனிஷி சில்லார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ரெய்ட்டா ஃபரியா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹெய்டன், யுக்தாமுகி, பிரியங்கா சோப்ரா ஆகிய ஐந்து இந்திய அழகிகள் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply