2021 – 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!

students

வரும் கல்வியாண்டு 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது

சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனுமதிக்கலாம் என்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை நடத்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் எந்த அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அதன் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

Leave a Reply