தீவிரவாதிகளின் பிடியில் பாகிஸ்தான் ராணுவ பள்ளி. 500 மாணவர்கள் கதி என்ன?

pakistanநேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள காபி ஷாப்பை தீவிரவாதி ஒருவன் சுமார் 50 பேர்களை பணய கைதியாக பிடித்து வைத்துக்கொண்டிருந்த மிரட்டியவனை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று பாகிஸ்தானில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக சுட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்த தாக்குதலில் 25 மாணவர்கள் காயமுற்றதாகவும், 21 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.

பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் சுமார் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனையடுத்து பாகிஸ்தானில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தெக்ரிக் இ தலிபான் என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பள்ளிக்குள் 7 பயங்கரவாதிகள் பயங்கரமான ஆயுதங்களுடன் நுழைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1AgpTMt” standard=”http://www.youtube.com/v/E8RYqaV7rB8?fs=1″ vars=”ytid=E8RYqaV7rB8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9699″ /]

Leave a Reply