அமெரிக்காவுக்கு அடுத்த சாதனையை நிகழ்த்த இருக்கும் இந்தியாவின் இஸ்ரோ

அமெரிக்காவுக்கு அடுத்த சாதனையை நிகழ்த்த இருக்கும் இந்தியாவின் இஸ்ரோ

satelliteகடந்த சில ஆண்டுகளாக பல செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தி வரும் இந்தியாவின் இஸ்ரோ வரும் மே மாதம் 22 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. புதிய வரலாறு படைக்கவிருக்கும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ‘இஸ்ரோ’ அமைப்பின் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் கே.சிவன் பத்திரிகையாளர்களிடம் கூறியபோது, ‘‘பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் மூலம் 22 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே ஒரே திட்டம் மூலம் 10 செயற்கை கோள்களை அனுப்பி நாங்கள் அனுப்பியுள்ளோம். அந்த வெற்றியை அடுத்து தற்போது அதைவிட இரண்டு மடங்கு செயற்கைக்கோள்களை அனுப்பும் இந்த திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்’’ என்று கூறினார்.

மேலும் சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள்கள் வரும் மே மாதம் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இந்தோனேஷியா நாட்டின் ‘லபான் ஏ3’, ஜெர்மனியின் ‘பிரோஸ்’, அமெரிக்காவின் ‘ஸ்கை சாட் ஜென் 2-1’ உள்ளிட்ட நுண்ணிய மற்றும் நானோ செயற்கைக் கோள்கள் ஏவப்படவுள்ளன.

கடந்த 2013-ல் அமெரிக்காவின் நாசா ஒரே திட்டத்தில் 29 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா அந்த முயற்சியில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai today news:  22 Satellites in One Mission – ISRO Creating History Again

Leave a Reply