திரையரங்குகளில் தினசரி 10 காட்சிகள். விரைவில் சட்டம் அமல்

திரையரங்குகளில் தினசரி 10 காட்சிகள். விரைவில் சட்டம் அமல்

theatresதற்போது திரையரங்குகளில் நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 காட்சிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில விரைவில் 10 காட்சிகள்  வரை அனுமதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், வங்கிகள் மற்றும் அலுவலகங் கள் ஆகியவை 24 மணி நேரம் இயங்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தில், பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்வதற்குரிய வசதிகளையும் அவர்களுக்குரிய பாதுகாப்பும் ஏற்பாடு செய்து தருவதை கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறு அமைச்சகம் மற்றும் மாநில அரசு துறைகளின் கருத்துகளை கேட்பதற்காக வரைவு அறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும் அவர்களுடைய ஆலோசனைகள் வந்தவுடன் இந்த சட்டம் இயற்றப்படும் என்றும் மத்திய அரசு வட்ட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால் திரையரங்குகளில் பத்து காட்சிகள் வரை அனுமதிக்கப்படும் என தெரிகிறது. முதலில் இந்த திட்டம் பெருநகரங்களில் அமல்படுத்தப்படும் என்றும் இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து படிப்படியாக இந்த திட்டம் மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply