24 மணி நேரமும் வங்கிகள்-திரையரங்குகள். மத்திய அரசு ஒப்புதல்
வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள், கடைகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு கடந்த மாதமே அறிவித்திருந்த நிலையில் தற்போது இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இரவில் பணி செய்யும் பெண்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டியதைக் கட்டாயமாக்குவது உள்பட பல முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்கள், சேவை துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வருங்காலங்களில் திரையரங்குகள், கடைகள், உணவகங்கள், வங்கிகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் அதே சமயத்தில் மாநில அரசுகள் இந்த சட்ட முன்வரைவை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அமைச்சரை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சீராக இதை நடைமுறைப்படுத்தவும், நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த சட்ட வரைவு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
சென்னையில் இந்த சட்டவரைவு பின்பற்றப்படுமா? என்பது தமிழக அரசின் முடிவில்தான் உள்ளது.