25வது திருமண தினம்: மிச்சேல் ஒபாமாவின் டுவீட்டுக்கு குவிந்த லைக்ஸ்கள்

25வது திருமண தினம்: மிச்சேல் ஒபாமாவின் டுவீட்டுக்கு குவிந்த லைக்ஸ்கள்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, மிச்சேல் ஒபாமாவின் 25வது திருமண தினம் கடந்த 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மிச்சேல் ஒபாமா திருமண தினத்தன்று எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்த டுவீட்டுக்கு ஒருசில மணி நேரங்களில் 1.2 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான ரீடுவீட்டுகளும், ரிப்ளைகளும் பஹ்டிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் அமெரிக்காவின் முன்னாள் முதல் குடிமகன், குடிமகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

கடந்த 1992ஆம் ஆண்டு ஒபாமா தம்பதிக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மாலியா, சாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply