2,50,000 இந்திய மாணவர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி: சிஸ்கோ நிறுவனம்
சிஸ்கோ நிறுவனம், 2,50,000 இந்திய மாணவர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி வழங்க உள்ளதாகக் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் தினேஷ் மல்கானி கூறுகையில்,’’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய ஐ.டி., துறையில் ஈடுபட்டு வருகிறோம். இங்கே ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர். இவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், புதிய வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதன்படி, மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில், திறமையான 2,50,000 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி வழங்குவோம். இதன்மூலமாக, திறமையான இளைஞர்களை உருவாக்க முடியும்,’’ எனத் தெரிவித்துள்ளார்.