தமிழக கட்சிகள் உள்பட 255 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து. தேர்தல் ஆணையம் அதிரடி
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பது போல கட்சிகளின் எண்ணிக்கைகளும் புற்றீசல் போல அதிகரித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் தோன்றும் கட்சிகள் உள்பட இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 2005 முதல் 2015 வரை தன் கட்சி சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும் தேர்தலில் பங்கேற்க செய்யாத 255 கட்சிகளை, இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து நீக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல்
*அனைத்திந்திய எம்.ஜி.ஆர் கட்சி
*பாரத மக்கள் காங்கிரஸ்
*பாரதிய ஜனநாயக தளம்
*கிருஸ்த்துவ மக்கள் கட்சி
*கொங்கு நாடு மக்கள் கட்சி
*காங்கிரஸ் ஜனநாயக பேரவை
*ஜனநாயக பார்வர்டு பிளாக்
*திராவிட தெலுகர் முன்னேற்ற கழகம்
*திராவிட மக்கள் காங்கிரஸ்
*விவசாயிகள் வளர்ச்சிகள் கட்சி
*கிராம முன்னேற்ற கழகம்
*ஐக்கிய மக்கள் முன்னேற்ற கழகம்
*காஞ்சி அறிஞர் அண்ணா திராவிட மக்கள் கழகம்
*எம்.ஜி.ஆர் கழகம்
*எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம்
*மக்கள் நலவுரிமை கழகம்
*மக்கள் தமிழ் தேசம்
*மக்கள் விழிப்பு உணர்வு இயக்கம்
*மறுமலர்ச்சி தமிழகம்
*மூவேந்தர் முன்னேற்ற கழகம்
*நெசவாளர் முன்னேற்ற கட்சி
*பச்சை குடிமக்கள் கட்சி
*மக்கள் நீதிக் கட்சி
*ராஜீவ் மக்கள் கட்சி
*ராம் மாநிலங்களவை பாதை
*தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ்
*தமிழநாடு தேசிய கிராமிய தொழிலாளர் காங்கிரஸ்
*தமிழ்நாடு மக்கள் கட்சி
*தமிழர் கழகம்
*தமிழக முன்னேற்ற முன்னணி
*தமிழக ராஜீவ் காங்கிரஸ்
*தாயக மக்கள் கட்சி
*தமிழர் பூமி
*தராசு மக்கள் மன்றம்
*தேசிய ஜனநாயக மக்கள் கட்சி
*தொண்டர் காங்கிரஸ்
*பழங்குடி மக்கள் கட்சி
*உழைப்பாளர் கட்சி
*உழைப்பாளர் பொதுநல கட்சி