26ஆம் தேதி தாமரை தீபம்: பட்ஜெட் குறித்து தமிழிசை
தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை கூறி வரும் நிலையில் பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது:
ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காவும் நிறைய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படுள்ளன. ஸ்டாலின் பட்ஜெட்டில் குறிப்பிடப்படுள்ளதை பார்ப்பதே இல்லை. முன்னரே முடிவு செய்து வைத்துக் கொண்டு குறை கூறுகிறார். விவசாயிகளை கவனத்தில் கொண்டு தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது
யார் யாரெல்லாம் பாஜக ஆட்சியில் பலன் பெற்றார்களோ, அவர்களது இல்லங்களில் 26ஆம் தேதி தாமரை தீபம் ஏற்றப்படுகிறது.