27 பேர் பலி, 106 பேர் கைது: டெல்லி வன்முறையில் பரபரப்பு
டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ரத்தன்லால் என்ற காவலர் உள்பட பலர் பலியாயினர். இந்த நிலையில் டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஒரு பக்கம் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வன்முறைக்கு யார் காரணம் என பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருவது டெல்லி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லி போலீசார் டெல்லி கலவரம் குறித்து கூறுகையில் ’கலவரம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், டெல்லி தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் பொது மக்கள் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் மேற்கொண்டு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது