ராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்த 2,750 நீதிபதிகள் கைது. துருக்கி அரசு அதிரடி

ராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்த 2,750 நீதிபதிகள் கைது. துருக்கி அரசு அதிரடி

turkeyதுருக்கியில் சமீபத்தில் ராணுவ புரட்சி ஏற்படுத்த முயன்றவர்களை அந்நாட்டு அரசு சாதுர்யமாக முறியடித்தது. ஆளும் கட்சியான ஏ.கே. கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களூடன் இணைந்து இந்த புரட்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். இந்நிலையில் புரட்சியில் ஈடுபட்டதாக 3,000 ராணுவ வீரர்களும், புரட்சிக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படும் 2,750 நீதிபதிகளும் பதவி நீக்கப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து துருக்கி நீதித்துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக், டிஆர்டி என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

ராணுவம், நீதித்துறை களங்கப்பட்டிருக்கிறது. அவற்றை சுத்தப்படுத்தி வருகிறோம். இரு துறைகளிலும் இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

துருக்கியில் தற்போது மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க மரண தண்டனைக்கான தடையை நீக்க, துருக்கி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் கைது செய்யப்பட்ட நீதிபதிகள் உள்பட அனைவரும் அச்சமடைந்து உள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலனே இந்த ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். அவரை துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி அமெரிக்காவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பெதுல்லாவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை அளித்தால் மட்டுமே எர்டோகனின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a Reply