ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு!! தமிழக அரசு

நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 1.01.2022 முதல் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.