2ஜி வழக்கில் மேல்முறையீடு: கனிமொழி, ராசாவுக்கு நோட்டீஸ்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்பட 19 பேர்களை விடுதலை செய்து சமீபத்தில் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் நேற்று சிபிஐயும் மேல்முறையீடு செய்தது
இந்த நிலையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதை தெரிவித்தார். இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் தாக்கால் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேருக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2g case delhi highcourt issue notice to kanimozhi and raja