திமுகவை பணியவைக்க அதிமுக எடுக்கும் சாதிக் பாட்சா அஸ்திரம்

திமுகவை பணியவைக்க அதிமுக எடுக்கும் சாதிக் பாட்சா அஸ்திரம்

sadhi16001நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு சமமாக வலுவான நிலையில் திமுக உள்ளதால் கடந்த முறை போல அதிமுக இம்முறை சட்டசபைக்குள்ளும், சட்டசபைக்கு வெளியேவும் அதிகாரத்தை வெளிக்காட்ட முடியாத நிலை உள்ளது. திமுகவின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு முக்கிய மசோதாவையும் நிறைவேற்ற முடியாது என்பதால் திமுகவை பணியவைக்க அதிமுக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சா மர்ம மரணம் அடைந்தார் என்பதும் அவரது மரணத்திற்கு திமுக முக்கிய புள்ளிகளின் நெருக்குதல்தான் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர், ‘தான் தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுப.இளவரசனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்சாவை கொலை செய்ததாகவும்’ தகவலை வெளியிட்டார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிஅலியில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2ஜி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் திடீரென அதிமுக வழக்கறிஞர்கள் சாதிக்பாட்சா வழக்கை தோண்டுவதால் திமுக வட்டாரங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply