2ஜி வழக்கின் இறுதி வாதம். டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சிபிஐ நீதிமன்றம்.

kanimozhiடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டிசம்பர் 19ஆம் தேதி இறுதிவாதம் தொடங்கும் என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் இறுதி வாதம் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளதாலும், இந்த வழக்கின் ஆவணங்களை படித்து பார்க்க தனக்கு அவகாசம் தேவை என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் அவர்கள் கோரிக்கை விடுத்ததாலும், இந்த வழக்கின் இறுதி வாதத்தை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply