தயாளு அம்மாளின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி. திமுக வட்டாரத்தில் பரபரப்பு.

dayalu2ஜி விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் முறைகேடாக பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி  தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனுவை இன்று சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாக பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது..

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிடுக்க கோரி அவரது மகள் செல்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க மறுத்ததோடு, செல்வி மனுவை தள்ளுபடி செய்தது. தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply