அஸ்ஸாமில் வரலாறு காணாத வெள்ளம்: 11 லட்சம் பேர் பாதிப்பு
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறு, குளங்கள் உள்பட அனைத்து நீர் ஆதாரங்களும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பில் இருப்பதாகவும், அங்கு வாழும் சுமார் 11 லட்சம் பொதுமக்கள் வெள்ளத்தால் அவதியுற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அஸ்ஸாம் மற்றும் மத்திய அரசின் முயற்சியால் ஏராளமான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வெள்ளம் காரணமாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் விடுமுறையில் உள்ளன. கடந்த மாதம் தான் அஸ்ஸாமில் வெள்ளம் பெருகெட்டுத்து ஓடியது. ஒரே மாதத்தில் மீண்டும் வெள்ளம் வந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்,