விராத் கோஹ்லியை சொல்லி வைத்து தூக்கிய செளதி: இந்தியா 87/3
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் என்ற நிலையில் உள்ளது
தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் 7 ரன்களிலும் பிபி ஷா 54 ரன்களிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தற்போது புஜாரே 17 ரன்களுடனும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் அவுட் ஆகி வெளியேறியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நியூசிலாந்து அணியின் செளதி, போல்ட் மற்றும் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.