3வது குழந்தைக்கு ஓட்டுரிமை ரத்து: சட்டம் கொண்டு வர பாபா ராம்தேவ் கோரிக்கை

3வது குழந்தைக்கு ஓட்டுரிமை ரத்து: சட்டம் கொண்டு வர பாபா ராம்தேவ் கோரிக்கை

இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும், அப்படி பெற்றுக்கொண்டால் மூன்றாவது குழந்தையின் ஓட்டுரிமை ரத்து என சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் பாபா ராம்தேவ் கோரிக்கை வைத்துள்ளார்.

இவ்வாறு செய்தால்தான் மக்கள் ஜனத்தொகையை குறைக்க முடியும் என்றும், இல்லையேல் அடுத்த 50 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாடு படுகொலைக்கு தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே மாடு கடத்தல்காரர்களுக்கும் மாடு பாதுகாப்பவர்களுக்கும் இடையே நடக்கும் வன்முறைகளை தடுக்க முடியும். இறைச்சி சாப்பிட வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு பல இறைச்சிகள் உண்டு

எல்லா நாடுகளும் மதுபானத்திற்கு தடை விதிக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மது தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளால் முடியும்போது இந்தியாவில் ஏன் தடை செய்யமுடியவில்லை. இது முனிவர்கள் வாழ்ந்த பூமி. இந்தியாவில் மதுவை முழுமையாக தடை செய்ய வேண்டும்

இவ்வாறு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

Leave a Reply