3 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்த முடியாது: தேர்தல் ஆணையம்.

திருப்பரங்குன்றம் 3 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்த முடியாது: தேர்தல் ஆணையம்

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தபோதும் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த தொகுதி உள்பட மற்ற மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

Leave a Reply