3 போட்டிகளில் தோல்வி எதிரொலி: நியூசிலாந்து அணியில் திடீர் மாற்றம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வென்றது. மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் டக் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணியின் புதிய டீம் பின்வருமாறு:
1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாட் ஆஸ்ட்லே, 3. டிரென்ட் போல்ட், 4. கொலின் டி கிராண்ட்ஹோம், 5. பெர்குசன், 6. மார்ட்டின் கப்தில், 7. மேத் ஹென்ரி, 8. டாம் லாதம், 9. கொலின் முன்ரோ, 10. ஜிம்மி நீஷம், 11. ஹென்ரி நிக்கோல்ஸ், 12. மிட்செல் சான்ட்னெர், 13. ராஸ் டெய்லர், 14. டிம் சவுத்தி