3 லட்சம் மணல் மூட்டைகள்: முக்கொம்பு மதகுகள் புயல் வேகத்தில் சீரமைப்பு

3 லட்சம் மணல் மூட்டைகள்: முக்கொம்பு மதகுகள் புயல் வேகத்தில் சீரமைப்பு

திருச்சி முக்கொம்பு அணையின் 9 மதகுகள் சமீபத்தில் உடைந்த நிலையில் அந்த மதகுகளை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 3 லட்சம் மணல் மூட்டைகளை அடுக்கும்பணி 7ஆவது நாளாக நீடித்து வருவதாகவும், மிக விரைவில் இந்த அணையின் மதகுகள் அடைக்கும் பணி முடிந்துவிடும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் சேதமடைந்த கதவணைகளை கடந்த 20ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு, தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply