3 இடியட்ஸ் படத்திற்கு ஜப்பான் அகாடமி விருது?

அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கி, கடந்த 2009ஆம் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படம், மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தியாவின் பழங்கால கல்வி நடைமுறையை மாற்றி, புதிய கல்விமுறையை புகுத்த வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதன்முதலில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது.

இந்த படம் இந்தியாவில் 2009ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனாலும், ஜப்பானில் 2013ஆம் ஆண்டுதான் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் சென்ற வருடத்திற்கான ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விருது பட்டியலில் இந்த படத்துடன் ஹாலிவுட்டின் ‘Captain Phillips’, ‘Django Unchained’, ‘Gravity ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் 7ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் அகாடமி விருதுக்கான திரைப்படம் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply