முதல்வர் மீது மூன்று கொலை வழக்குகள். ஈவிகேஎஸ் இளங்கோவன்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா, அதிமுக ஓபிஎஸ் என இரு அணியாக பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக சசிகலா சிறை சென்றதால், அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை வள்ளலார் நகரில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ”தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிக குற்றங்கள் செய்தவருக்கே அதிமுகவில் அடைக்கலம் என்ற நிலை உள்ளது. அதிமுகவிடமிருந்து நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பது கடினம்” என்று தெரிவித்தார்