30 செமீ மழை, 70 கிமீ வேக காற்று: மீண்டும் நாகைக்கு வந்த சோதனை
சமீபத்தில் நாகை உள்பட டெல்டா பகுதியை புரட்டி போட்ட கஜா புயலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீண்டு வரவில்லை. பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளில் உள்ளது. இந்த நிலையில் நாகை பகுதியில் மீண்டும் கனமழையும் வேகமான காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துல்ளார். மேலும் வீராணம், பெருமாள், வாலாஜா ஏரிகளில் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் தற்போது மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்ற செய்தி அந்த பகுதியினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.