ஈராக் அரசுக்கு உளவு கூறிய 30 முஸ்லீம் பிரமுகர்களை சுட்டு கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்.

isis murder 1  ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் 30 சன்னி முஸ்லீம் பிரமுகர்களை வரிசையாக படுக்க வைத்து சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த கொடூர செயல் உலகம் முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

isis murder 2

நேற்று பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் சுமார் 30 சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்களை பிடித்துக்கொண்டு சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வரிசையாக படுக்க வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்த கொடூர காட்சி அந்த பகுதி மக்கள் முன்னிலையில் நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

isis murder

இந்த புகைப்படங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 30 சன்னி முஸ்லீம்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக செயல்பட்டதோடு, தீவிரவாதிகளின் முகாம் குறித்து ஈராக் அரசுக்கு உளவு கூறியதால் அவர்களை கொலை செய்ததாக தீவிரவாதிகளின் தரப்பில் இருந்து வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply