சென்னையில் 30 புதிய வழித்தடங்களில் மினிபேருந்துகள் இயக்கம்
சென்னையில் ஏற்கனவே சிற்றுந்து எனப்படும் மினிபஸ் போக்குவரத்து பொதுமக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நேற்று முதல் மேலும் 65 மினி பேருந்துகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். சென்னை, புறநகர் பகுதிகளில் முக்கியமான பஸ், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்துள்ள மினி பஸ்கள் ஆலந்தூர், அசோக் நகர், சிஎம்பிடி, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 30 புதிய வழித்தடங்களில் இயங்கும் மினி பேருந்துகளின் விபரங்கள் பின்வருமாறு