திருவாரூர் மருத்துமனையில் 30 பேர் அனுமதி

திருவாரூர் மாவட்டத்தில், முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கொறாடாச்சேரி, கீழப்பாளையூர் கோணவாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர்கள் பூமிநாதன்(29), ராஜேஷ்(27), நளினி(6), சாரதா(55), விஜயா(35), வெண்ணிலா வயது(18) ஜெயச்சந்திரன் (11), பட்டு(60) ஆகியோருக்கு திடீரென வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைப் போல கொறாடாச்சேரி அரசு மருத்துவமனையில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

மேலும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 பேருக்கு வாந்தி, பேதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Reply