மேற்குவங்க மாநிலத்தில் பிரபல கோவில் ஒன்றில் பிரசாதம் சாப்பிட்ட 300 பக்தர்கள் திடீரென மயக்கம் அடைந்ததால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் என்ற நகரில் பிரபலமான கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் இன்று சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோவிலில் சிறப்பு பூஜை முடிந்தவுடன் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்கள் அனைவரும் திடீர் திடீரென மயங்கிவிழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கோவில் பிரசாதம் தயாரிக்க காண்ட்ராக்ட் எடுத்தவரிடம் போலீஸார் திவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பிரசாத உணவை சோதனை செய்யவும் போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.