11வது விரல் தெரியும். 31வது விரல் தெரியுமா? சீனாவில் ஒரு அதிசய குழந்தை
பொதுவாக மனிதர்களுக்கு கையில் 10 விரல்களும், காலில் 10 விரல்களும் மட்டுமே உள்ள நிலையில் பதினொராவது விரல் இருந்தாலே அதை அதிசயமாக பார்ப்போம். ஆனால் சீனாவில் பிறந்த ஒரு குழந்தைக்கு கை, கால் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 31 விரல்கள் உள்ளது.
சீனாவில் ஷென்சென் பகுதியில் என்ற பகுதியில் பிறந்த ஒரு குழந்தைக்கு 2 கைகளில் 15 விரல்களும், கால் பாதங்களில் 16 விரல்களும் என மொத்தம் 31 விரல்கள் உள்ளன. இவற்றில் ஒரு கையில் 8 விரல்களும், மற்றொன்றில் 7 விரல்களும் கால்களில் தலா 8 விரல்கள் இருக்கின்றன. இத்தனை விரல்கள் இருந்து கை, கால்களில் பெருவிரல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனர்கள் இந்த அதிசய குழந்தையை ‘ஹாங்காங்’ என அழைக்கின்றனர். இதுபோன்று அதிக விரல்களுடன் ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதாக சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே குழந்தையின் தாய்க்கும் இது போன்று கால், கைகளில் அதிக அளவில் விரல்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் இது மரபு வழியாக குழந்தைக்கும் அதிக அளவில் விரல்கள் உருவாகி இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கை, கால்களில் அதிக விரல் இருப்பதால் குழந்தை ஹாங்காங் மிகவும் சிரமப்படுவதாகவும் எனவே சிகிச்சை மூலம் அதை ஒருசில விரல்களை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.