சி.ஆர்.பி.எஃப்-ல் 3136 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

crpf

இந்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஜம்மு-காஷ்மீர் மண்டலம், தெற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 3136 டெக்னீஷியன் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3136

காலியிடங்கள் விவரம்:

தெற்கு மண்டலத்தில் – 888

தமிழ்நாடு – 157

ஆந்திரா – 127

தெலுங்கானா – 89

கர்நாடகா – 122

கேரளா – 71

பாண்டிச்சேரி – 02

மகாராஷ்டிரா – 190

குஜராத் – 127

கோவா – 03

ஜம்மு – காஷ்மீர் – 560

மத்திய மண்டலம் – 1247

வடகிழக்கு மண்டலம் – 441

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம், ஐ.டி.ஐ (2 ஆண்டு). டிப்ளமோ மற்றும் பணி சார்ந்த அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி ஓட்டுநர் பணிக்கு 21 – 27க்குள்ளும், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 – 23க்குள் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்: ஆண்கள், குறைந்தபட்சம் 170 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு: ஆண்கள் சாதாரண நிலையில் 80 செ.மீட்டர் விரியும் திறன் கொண்டிருக்க வேண்டும். உயரம், வயதிற்கேற்ற எடையும், குறிப்பிட்டப்பட்டுள்ள அளவு பார்வைத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.50.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crpfindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply