கொலம்பியாவில் பள்ளி பேருந்தில் தீ விபத்து. 32 குழந்தைகள் கருகி பலி

6aகொலம்பியா நாட்டில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்ததால் பேருந்தின் உள்ளே இருந்து 32 பள்ளிக்குழந்தைகள் எரிந்து சாம்பலாயினர். மேலும் 20 குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலம்பியா நாட்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பெட்ரோல் நிரப்ப முடிவு செய்த டிரைவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் பேருந்தை நிறுத்தி பெட்ரோல் நிரப்புமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் பேருந்தின் இன்ஜினை அவர் நிறுத்தவில்லை. பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தபோது, பேருந்தின் இன் ஜினில் இருந்து கிளம்பிய தீப்பொறி ஒன்றி பெட்ரோலின் மீது பட்டதால் உடனே பேருந்து குபுகுபு என தீப்பிடித்தது. பேருந்தில் இருந்த பள்ளிக்குழந்தைகள் அலறினர்.

இந்த தீவிபத்தில் 32 குழந்தைகள் உயிரோடு கருகி சாம்பலாயினர். 20 குழந்தைகள் உயிருக்கு போராடியவாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கொலம்பியாவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என கொலம்பிய அதிபர் அறிவித்துள்ளார்.

பொறுப்பில்லாம் இன்ஜினை அணைக்காமலேயே பெட்ரோல் நிரப்பிய டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சுமார் 60 வருட ஜெயில் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

6b 6a 6

Leave a Reply