தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் ராஜினாமாவை செய்ததை அடுத்து மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் 32 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து புதிய கட்சி அறிவிப்பை ஜி.கே.வாசன் வெளியிடுவார் என்ற செய்தி வெளிவந்திருக்கும் நிலையில் திடீரென இன்று காலை 32 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துளனர். இதனால் ஜி.கே.வாசனின் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பாட்டுள்ளது.
தற்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜி.கே.வாசன், இன்னும் சில நிமிடங்களில் தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்க்கப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் மேலிடம் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக மாணவர் காங்கிரஸ் பிரிவு தலைவர் சுனில் ராஜா உட்பட 12 மாநில நிர்வாகிகள், 19 மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சி மேலிடத்துக்கு அனுப்பி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்