சீனாவில் நடந்த பயங்கர நிலச்சரிவு. காணாமல் போன 33 கட்டிடங்கள்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 33 கட்டிடங்கள் காணாமல் மண்ணுக்குள் புதைந்தும், இடிந்தும் போயின. மேலும் இதுவரை 33 உயிரோடு புதைந்ததாகவும், 59பேர் காணாமல் போனதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் 36 பேர் ஆண்கள் என்றும் 23 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெற்கு சீனாவில் உள்ள Shenzhen city என்ற பகுதியில் கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 100,000 சதுர மீட்டர் கொண்ட இண்டஸ்ரியல் பார்க்கில் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இங்கிருந்த 33 கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தும், தரைமட்டமாக இடிந்தும் உள்ளன. பேரிடர் நிகழ்ந்தது ஞாயிற்றுக்கிழமை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மீட்புப்படையினர் இரவுபகலாம் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடங்களை மூடிய மண்ணை வெளியே எடுப்பது பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.